இந்தியா 2020 என்ற திட்டம், பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை 10 வருடங்களுக்கு சம நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால், வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்கு கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பண்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை டாக்டர் அப்துல்கலாம் அவர்கள், பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தார். அந்த இலட்சிய கனவு நனவாக வேண்டுமென்றால், மக்களின், இளைஞர்களின் சிந்தனை ஒன்றுபட வேண்டும், செயல் ஒன்றுபடவேண்டும், அப்படி பட்ட ஒருங்கிணைப்பை செய்து, மாணவர்களின், இளைஞர்களின், மக்களின், அரசியல் தலைவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, இந்தியாவை வளமான நாடாக்குவோம்.
டாக்டர் கலாமின் வளர்ந்த இந்தியா 2020 படைப்பதற்கு, கீழ்கண்ட 10 சிறப்பு கொள்கைகள் திட்டங்களாக வடிவெடுக்க உழைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை. அந்த உணர்வுள்ள மாணவ மாணவிகள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் இந்தியாவின் மிகப் பெரிய சக்தி. 64 கோடி இளைஞர்களை பெற்ற நாடு இந்தியா எனவே இளஞர்கள், இளைஞிகள் மனஉறுதியோடு முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை. எனவே, டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை மலரச்செய்ய, கலாமின் இலட்சிய இந்தியா இயக்கம், மாணவர்களோடு, இளைஞர்களோடு, மக்களோடு, மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து செயல்படும்.